இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

​தமிழகத்தை உலுக்கிய அரசியல் தீக்குளிப்பு சம்பவங்கள்..!

April 16, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1090 Views

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தவறாக சித்தரித்து மீம்கள் வெளியானதால் விருதுநகரில் அவரது உறவினர் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். 

அதே போல் வைகோவின் நியுட்ரினோ திட்டத்திற்கு எதிரான நடைப்பயணத்தின் போது மதுரையில் தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடந்த இரண்டு வாரங்களுக்குள் நடந்த இந்த  இரண்டு தீக்குளிப்பு சம்பவங்கள் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்  தமிழகத்தை உலுக்கிய அரசியல் தீக்குளிப்பு சம்பவங்கள்  குறித்த விவரங்களை காணலாம்.. 

1964 - இந்தி திணிப்பை எதிர்த்து அரியலூரை சேர்ந்த சின்னசாமி தீக்குளிப்பு

1965 - இந்தி திணிப்பு விவகாரத்தில் சென்னையில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்து உயிரிழந்தனர்

1995 - இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களை எதிர்த்து அப்துல் ரவூப் என்பவர் தீக்குளிப்பு 

2009 - ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக சென்னை சாஸ்திரி பவன் எதிரே முத்துகுமார் தீக்குளிப்பு

2011 - இலங்கை தமிழர்கள் விவகாரத்தால் மனவேதனை அடைந்த கிருஷ்ண மூர்த்தி தீக்குளித்து உயிரிழந்தார்

2011 - ராஜிவ் காந்தி கொலை குற்றத்திற்காக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் விடுதலை கோரி 21 வயது செங்கொடி தீக்குளிப்பு 

2013 - மதுரையில் ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக ஆரோக்கியராஜ் என்பவர் தீக்குளித்து பலி

2016 - நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்புப் பேரணியில் விக்னேஷ் பாண்டியன் என்பவர் தீக்குளித்து உயிரிழப்பு 

2018 - நியுட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மதிமுக நிர்வாகி ரவி தீக்குளித்து உயிரிழந்தார்

2018 - மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தவறாக சித்தரித்து மீம்கள் வெளியானதால் அவரது உறவினர் சரவணன் சுரேஷ் தீக்குளித்து உயிரிழப்பு Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட்

தற்போதைய செய்திகள் May 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 80.11 /Ltr (₹ 0.32 )
  • டீசல்
    ₹ 72.14 /Ltr (₹ 0.27 )