இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது!

April 16, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3912 Views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக சர்ச்சையில் சிக்கிய, கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிபவர் நிர்மலா தேவி. இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு, தொலைபேசியில் சில மாணவிகளை வலியுறுத்தினார். 

உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்கினால், 85% மதிப்பெண்கள் பெற முடியும் என்றும், வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும், மாணவிகளுக்கு அவர் ஆசை வார்த்தை கூறும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து, அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் மாணவிகள் புகார் அளித்தனர். இதனால், கல்லூரியில் இருந்து நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், கல்லூரி நிர்வாகமும், மாதர் அமைப்பும் அவர் மீது, தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தன.

இதனைத் தொடர்ந்து, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றனர். ஆனால், அவர் வீட்டுக்குள் இருந்துகொண்டு, கதவை திறக்க மறுத்தார். இதனால், சுமார் 6 மணி நேரமாக வீட்டின் வெளியே காத்திருந்த போலீசார், பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, நிர்மலா தேவியை கைது செய்தனர். இதன் பின்னர், அவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )