இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

பேராசிரியை நிர்மலாதேவி மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு!

April 16, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1463 Views

தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த ஆடியோவில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பெயர் இடம்பெற்றதால், அதன் வேந்தர் என்ற அடிப்படையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளதாகக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.    

இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் எவரும் தப்பிவிடக் கூடாது எனவும், பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )