முகப்பு > தமிழகம்

ரஜினியின் கருத்தும், பாஜகவின் கருத்தும் ஒன்று தான்: தமிழிசை

May 15, 2017

ரஜினியின் கருத்தும், பாஜகவின் கருத்தும் ஒன்று தான்: தமிழிசை


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்கதக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை முதல் சந்தித்து வரும் நடிகர் ரஜினியை பற்றி தான் தமிழக அரசியல் முழுவதும் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது, அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

மேலும் எந்த திரைப்படமாக இருந்தாலும் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் அரசியல் அப்படி அல்ல எனவும் தெரிவித்த அவர், ஒரு விஷயத்தில் தான் ரசிகர்களும், தமிழர்களும் தொடர்ந்து ஏமாந்து வருவதாகவும், எனினும் அந்த விஷயம் என்ன என்பதை இப்போது கூற முடியாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். ஊழலை பற்றி பேசிய அவர் தவறான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதே விலகிக் 
கொள்ளலாம் என அழுத்தமாக கூறினார்.

இதனிடையே, ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம், ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது பாஜகவின் கருத்து எனவும், அவரது பேச்சின்மூலம் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அரசியலுக்கு வரும் போது நல்ல கட்டமைப் போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து என தெரிவித்தார். பல்வேறு பட்ட கருத்துகளால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்