இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

பள்ளி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவன்!

November 15, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3721 Views

குழந்தைகள் தினமான நேற்று தஞ்சை அருகே தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளி அடுத்த நடுப்படுகை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் சதீஸ்பாபு திருகாட்டுப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். 

இதனிடையே நேற்று காலை பள்ளியில் சிறப்பு வகுப்பு வந்த மாணவர் சதீஷ்குமார் வகுப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வகுப்பறையில் சக மாணவர் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த திருக்காட்டுபள்ளி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகள் தினமான இன்று பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவரின் மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே மாணவரின் உடல் வைக்கப்பட்டுள்ள தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)