இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

சேலம்: ரியல் எஸ்டேட் தொழில் அதிபரின் சொகுசு காரை எரித்த சிறை வார்டன் கைது!

September 14, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2553 Views

சேலத்தில் முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் அதிபரின் சொகுசு காரை எரித்த சிறை வார்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் முல்லை நகரை சேர்ந்த டேவிட் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 20-ம் தேதி அவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக டேவிட் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் தீவைத்துவிட்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தீ வைத்த மாதேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அதில் மாதேஷ் சேலம் மத்திய  சிறைச்சாலையில் சிறை வார்டனாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. சில மாதங்களுக்கு வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் தீ வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் ஏற்கனவே ஒரு சொகுசு காரை தீ வைத்து கொளுத்தியதும் தெரியவந்துள்ளது. பகலில் சிறை வார்டனாகவும், இரவில் குற்றம்சம்பவங்களில் அவர் ஈடுபட்டுவந்தது காவல்துறை வட்டாரத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )