இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

குட்கா ஊழல் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் சம்பத்குமார் இன்று சிபிஐ அலுவலத்தில் ஆஜர்!

September 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1007 Views

குட்கா விவகாரத்தில் காவல் ஆய்வாளர் சம்பத்குமார் இன்று சிபிஐ அலுவலத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அனுமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே  குட்கா ஆலை  பங்குதாரர்கள் மாதவராவ், சீனிவாசராவ், இடைத்தரகர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பி.செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி கே.கே.பாண்டியன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை 4 நாள் காவிலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தடையை மீறி குட்காவை விற்பனை செய்ய அனுமதி பெற்றது தொடர்பாக நூற்றுக்கணக்கான கேள்விகளை கேட்டு அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சம்பத்குமார் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி ஆணையர் மன்னர் மன்னனுக்கும் சிபிஐ சம்மன்  அனுப்பியுள்ளதால் அவரும் இன்று ஆஜராக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.   

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )