முகப்பு > தமிழகம்

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை: அன்புமணி ராமதாஸ்

September 14, 2017

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை: அன்புமணி ராமதாஸ்


தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி அவர் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் கூறினார்.

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறப்பது நல்ல முயற்சிதான் எனக் கூறிய அன்புமணி ராமதாஸ், மும்மொழி பாடத்திட்டத்தை நவோதயா பள்ளிகள் அறிமுகம் செய்தால்தான் தமிழக மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்