முகப்பு > தமிழகம்

சசிகலா விவகாரம்: கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி முக்கிய தகவல்

September 14, 2017

சசிகலா விவகாரம்: கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி முக்கிய தகவல்


பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் வி.கே. சசிகலாவுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்று தான் பார்வையிட்டதாகக் கூறினார். வி.கே. சசிகலாவுக்கோ, இளவரசிக்கோ எவ்வித சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்பதை தான் நேரில் உறுதி செய்ததாகவும் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். 

எனினும், ஊடகங்கள் சிலவற்றில், சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

சிறையில் உள்ள மற்ற கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அவ்வாறேதான் சசிகலாவும், இளவரசியும் நடத்தப்படுவதாகவும் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். நீதிமன்றம் விதித்த தண்டனைப்படி, சிறையில் அவர்களுக்கு பணிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்