முகப்பு > தமிழகம்

சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளியின் குண்டர் சட்டம் ரத்துக்கு பெற்றோர் வேதனை!

September 14, 2017

 சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளியின் குண்டர் சட்டம் ரத்துக்கு பெற்றோர் வேதனை!


சிறுமி ஹாசினியை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளியின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை போரூர் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 7வயது சிறுமி ஹாசினி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஹாசினியின் பெற்றோர் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஹாசினியின் பெற்றோர், உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளதாக தெரிவித்தனர். 

இதுபோன்ற உத்தரவுகளால் மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்