முகப்பு > தமிழகம்

​மனநலம் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

September 14, 2017

​மனநலம் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!


ஓமலூர் தாரமங்கலம் அருகே மனநலம் பாதித்த பள்ளி சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள பாப்பம்பாடியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது 15 வயது மகளை, அதே கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

அந்த வழியாக வந்த ஒருவர் சிறுமியை இளைஞர்கள் கொடுமை செய்வதை பார்த்து சத்தமிட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

பின்னர் அந்த சிறுமியை மீட்டு, வீட்டிற்கு அழைத்து வந்தபோது, நடந்தவற்றை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட தாரமங்கலம் போலீசார், பள்ளிச்சிறுவன் உட்பட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்