முகப்பு > தமிழகம்

நிர்மலா சீதாராமன் மீது கனிமொழி தாக்கு

September 14, 2017

நிர்மலா சீதாராமன் மீது கனிமொழி தாக்கு


நீட் தேர்வில் பொய் வாக்குறுதி கொடுத்த நிர்மலா சீதாராமன் தற்பொழுது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கெதிராக உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சார்பாக தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ஒடுக்கப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்டதுதான் நீட் தேர்வு என்று தெரிவித்தார். 

அனிதாவின் கனவை பாரதிய ஜனதா அரசு சிதைத்து விட்டதாக கூறிய அவர் நீட் விவகாரத்தில் பொய் வாக்குறுதி கொடுத்த நிர்மலா சீதாராமன் தற்பொழுது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்