முகப்பு > தமிழகம்

​வரும் 20-ந் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 14, 2017

​வரும் 20-ந் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை வரும் 20-ம் தேதி வரை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தினகரன் அணியினர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், தங்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான உத்தரவாதத்தை, நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கும், இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 

அப்போது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என உறுதியாக கூற முடியாது, என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். 

மேலும், சபாநாயகருக்கான அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை அவர் தொடங்கிவிட்டார் என்றும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை, வரும் 20-ம் தேதி வரை நடத்தக்கூடாது என தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை அதே தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்