முகப்பு > தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

September 14, 2017

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2014ம் ஆண்டு மே மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 7,700 ரூபாயாக இருந்ததாகவும், இது தற்போது 3,400 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், 2014ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 70 ரூபாயாக இருந்ததாகவும், தற்போது 80 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், 2014ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாயாக இருந்ததாகவும், அது தற்போது 62 ரூபாயாக உள்ளதாகவும் மணீஸ் திவாரி தெரிவித்துள்ளார். 

கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ள நிலையில், விலை உயர்த்தப்பட்டிருப்பதன் காரணம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதுள்ள நிலையில், பெட்ரோலின் விலை லிட்டருக்கு 37 ரூபாயாகவும், டீசலின் விலை 29 ரூபாயாகவும் விற்க முடியும் என்றும் மணீஸ் திவாரி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்