இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

தீக்குளித்த மருமகனை பார்த்து கதறி அழுத வைகோ!

April 14, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3902 Views

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

விருதுநகர் ஸ்டேட் பேங் காலனியில் வசிப்பவர் சரவணன் சுரேஷ். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகனான அவர், பழைய அட்டை  வியாபாரம் செய்து வருகிறார். மதிமுகவில் ஈடுபாடு கொண்டுள்ள அவர், இன்று காலை தனது காரில், விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சர்வீஸ் சாலைக்குச் சென்றார்.

அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி கோஷமிட்டபடியே அவர் தன் உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

இதையடுத்து பிற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். போலீசார் சரவணன் சுரேஷை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேஷிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தாம் தீக்குளித்ததாகக் கூறினார். 80% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சுரேஷ் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன் சுரேஷை வைகோ இன்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் கண்ணீர் மல்க கதறி அழுதார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவள்ளூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கத்திமுனையில்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில்

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது, மணல் கடத்திச்

குரங்கனி தீ விபத்து திட்டமிட்ட சதி இல்லை என்று அமைச்சர்

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)