இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

அரசு நலத்திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறியவர் மீது தாக்கு

March 14, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1744 Views

திருவாரூர் வடபாதிமங்கலம் ஊராட்சியில் அரசு நலத்திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறியவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிளியனூர் மேல் தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர், ஊராட்சி செயலர் ரமேஷ் அரசு நலத்திட்டப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி ஊராட்சி வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாயை ஊராட்சி செயலர் ரமேஷ் முறைகேடாக எடுத்த 
ஆதாரங்களையும், தகன கொட்டகை அமைக்காமலேயே 2 லட்சம் செலவிட்டதாக கணக்கு காட்டப்பட்ட ஆதாரங்களையும் தாமரைச்செல்வன் திரட்டியுள்ளார்.  

இதனால் ஆததிரமடைந்த, வடபாதிமங்கலம் ஊராட்சி செயலர் ரமேஷ், தனது நண்பர்களுடன் சென்று தாமரைசெல்வனை கத்தியால் தாக்கியதோடு, அவரது அலுவலகத்தையும் சேதப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த தாமரைசெல்வன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஊராட்சி செயலர் ரமேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )