இன்றைய வானிலை

  • 32 °C / 89 °F

Jallikattu Game

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறை!

March 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1680 Views

அரியலூர் மாவட்டத்தில்  திருமண உதவித் தொகைக்கு சான்று தர 500 ரூபாய்  லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலுப்பையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமசாமியிடம், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தனது மகளின் திருமண உதவித்தொகை ரூபாய் 5000 வாங்குவதற்காக விண்ணப்பம் அளித்திருந்தார்.

இந்நிலையில், உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்க 500 ரூபாய் லஞ்சமாக கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி கேட்டுள்ளார். இது தொடர்பாக அண்ணாதுரை அளித்த புகாரின் அடிப்படையில் ராமசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

இவ்வழக்கு குறித்த விசாரணை அரியலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராமசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ரவி உத்திரவிட்டார்.

இதனையடுத்து ராமசாமியை திருச்சி மத்திய சிறையில் அடைத்னர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )