இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

மாணவ, மாணவிகளை துப்புரவு பணிக்கு பயன்படுத்திய அரசுப் பள்ளி!

February 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
935 Views

மாணவ, மாணவிகளை பள்ளியின் துப்புரவு பணிக்கு பயன்படுத்தியதைக் கண்டித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது. 

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இங்கு துப்புரவு பணியாளராகப் பணியாற்றும் சோலைராஜ் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிக்கும் தன்னுடைய சொந்தப் பணிக்கும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 

அதே போல் ஆசிரியர்கள் சிலரும் மாணவர்களைத் துன்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டி பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி பெற்றோர்களும், மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அலுவலர் வருவதாகக் கூறியதை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க

திருநெல்வேலி மாவட்டம் ராமநதி அணை மற்றும் கடனாநதி அணை

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலைக்காக 18 கிலோமீட்டர்

கோவையில், வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அன்னூர் புறவழிச்சாலை

தற்போதைய செய்திகள் Jun 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.89 /Ltr (₹ -0.15 )
  • டீசல்
    ₹ 71.44 /Ltr