இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

​மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சக கல்லூரி மாணவர் கைது!

February 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2495 Views

சென்னையில் சக கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வடபழனியில் பிரபல தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரிக்கு அருகே உள்ள பகுதியில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த போலீசார் சந்தேகமடைந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வாங்க வந்ததாக மாணவர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து உடனடியாக கஞ்சா விற்பனை நடைபெற்ற இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் கஞ்சா விற்பனை செய்ததும், அதே கல்லூரியை சேர்ந்த பி.டெக் படிக்கும் மாணவர் சுதர்சன் என்பதும், நொளம்பூரை சேர்ந்த அவர் நீண்ட நாட்களாக சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து, சுதர்சனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மாணவர் சுதர்சனிடம் பிற கல்லூரி மாணவர்களும் கஞ்சா வாங்கி அதனை விற்பனை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க

திருநெல்வேலி மாவட்டம் ராமநதி அணை மற்றும் கடனாநதி அணை

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலைக்காக 18 கிலோமீட்டர்

கோவையில், வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அன்னூர் புறவழிச்சாலை

தற்போதைய செய்திகள் Jun 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.89 /Ltr (₹ -0.15 )
  • டீசல்
    ₹ 71.44 /Ltr