இன்றைய வானிலை

  • 30 °C / 86 °F

Breaking News

Jallikattu Game

​தமிழக அரசு பயங்கரவாதிகளை விடுவிக்க கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

February 14, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1455 Views

அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோரது பெயரை சொல்லி, தமிழக அரசு பயங்கரவாதிகளை விடுவிக்க கூடாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 1000க்கும் மேற்பட்ட கைதிகளை தமிழக அரசு விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக நன்நடத்தை விதிகளின் படி குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கைதிகளை கண்டறிந்து அவர்கள் குறித்த ஒரு பட்டியலை சிறைத்துறை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகளின் சிலரின் பெயரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, ஆர்.எஸ்.புரத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை எனவும், இந்தியாவின் பயங்கரவாத பயிற்சி மையமாக தமிழகம் உள்ளது என்றும் கூறினார். 

யார் ஆட்சிக்கு வந்தாலும், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவு கூறும் விதமாக, ஆர்.எஸ்.புரத்தில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் எனவும், பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )