இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஐ.டி பெண் ஊழியரை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது!

February 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1516 Views

சென்னையில் ஐ.டி பெண் ஊழியரை தாக்கி நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அடுத்த அரசன் கழனி அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஐ.டி.ஊழியரை வழிமறித்து தாக்கி நகை, இரண்டு சக்கர வாகனம், கைபேசி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் ஐ.டி ஊழியர் பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் செம்மஞ்சேரி அரசு மதுபான கடை  அருகே இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்துச்சென்ற போலீசார் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராவில் ஆய்வு செய்ததில் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றது தெரிய வந்தது. 
இதனை தொடர்ந்து செம்மஞ்சேரி பகுதியில் பதுங்கியிருந்த சூர்யாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே படுகாயம் அடைந்து பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.டி பெண் ஊழியருக்கு இன்று நினைவு திரும்பியது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )