இன்றைய வானிலை

  • 30 °C / 86 °F

Breaking News

Jallikattu Game

​நிதி நிறுவன மோசடியில் ரூ.227 கோடி சொத்துக்கள் பறிமுதல்: தமிழக காவல்துறை!

February 14, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1607 Views

கன்னியாகுமரியில் நிதிநிறுவனம் மோசடி தொடர்பாக, இதுவரை 227கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதியான மத்தம்பாலை பகுதியில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில், இரு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்திருந்தனர். 

இந்த நிலையில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக, தலைமறைவான அந்நிறுவன அதிபர் நிர்மலன், மதுரை நீதி மன்றத்தில் சரண் அடைந்தார். 

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதுவரைக்கும் 370 கோடியே 11லட்சத்து 35ஆயிரம் ரூபாய் குறித்து, 5,061 பேர் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நிதி நிறுவன உரிமையாளரிடமிருந்து, 227 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் பால்துரை தெரிவித்தார் . 


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )