இன்றைய வானிலை

  • 34 °C / 93 °F

Jallikattu Game

​முல்லைப்பெரியாறு அணையில் மூவர் குழு இன்று ஆய்வு!

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1232 Views

பருவ மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து மூவர் குழு இன்று ஆய்வு செய்கிறது.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரமாக திகழக்கூடிய முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 123 அடியாக உள்ளது.  பருவமழையினால் அணையின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்து மீண்டும் 142 அடியை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. 

இந்நிலையில் அணையின் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழு இன்று முல்லைப்பெரியாறு அணைக்கு செல்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி மூவர் குழு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது. 16 மாதங்களுக்கு பின்னர் புதிய உறுப்பினர்களுடனான மூவர் குழு இன்று தனது ஆய்வை மேற்கொள்கிறது. 

மத்திய நீர்வள ஆணைத்தினுடைய புதிய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ், தமிழக பொது பணித்துறைச் செயலாளர் பிரபாகரன், கேரள அரசின் பிரதிநிதியான டிங்கு பிஸ்வால் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவினர் இன்று ஆய்வு செய்கிறது. முதலாவதாக பிரதான அணை, பேபி அணையினை,  ஆய்வு செய்த பின்னர் சுரங்கப்பகுதியில் சீப்பேஜ் வாட்டர் அளவினை கணக்கிட உள்ளனர். அதில் நீர்க்கசிவு அளவினையும் சேகரிக்க உள்ளனர். பின்னர் 13 மதகு பகுதியின் சட்டர்களை ஏற்றி இறக்கி சோதனை செய்ய உள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியை

திருநெல்வேலி நகர்பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் 31 மாணவர்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, தமிழகம் முழுவதும்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.26 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.71 /Ltr (₹ -0.09 )