​போக்குவரத்துக்கழக சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுவது இயலாத காரியம் - செல்லூர் ராஜூ | Sellur Raju defends mk stalin's plea | News7 Tamil Sellur Raju defends MK Stalin's plea | Tamil News

இன்றைய வானிலை

 • 31 °C / 87 °F

Jallikattu Game

​போக்குவரத்துக்கழக சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுவது இயலாத காரியம் - செல்லூர் ராஜூ

November 14, 2017 எழுதியவர் : arun எழுதியோர்
Image
 • Image SHARE
 • Image TWEET
 • Image SHARE
1810 Views

அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் சொத்துக்களை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் கொடுப்பது இயலாத செயல், என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கும் மூன்று முகவர் நிறுவனங்களில், ஒன்று மட்டும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்காமல் உள்ளதாகவும், விரைவில் அந்த முகவர் நிறுவனமும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

முன்னதாக ஸ்டாலின் வெளிட்டிருந்த அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டடங்கள், பேருந்துகள், பணிமனைகள் ஆகியவற்றை 2 ஆயிரத்து 453 கோடி ரூபாய்க்கு அடகு வைத்துள்ள தகவல், அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருந்தார். 

பொதுமக்களின் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் மோசமான நிர்வாகக் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையளிப்பதாகவும், அரசு போக்குவரத்துக் கழகத்தின்  490 பேருந்துகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அயனாவரம், மந்தைவெளி பணிமனைகள், பேசின்பாலம், தி.நகர், திருவான்மியூர், அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

சில சுவாரஸ்யமான செய்திகள்

  தற்போதைய செய்திகள் Aug 15
  மேலும் படிக்க...
  Image
  Image

  பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
   ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
   ₹72.29 /Ltr (₹ 0.13 )