இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​போக்குவரத்துக்கழக சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுவது இயலாத காரியம் - செல்லூர் ராஜூ

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1721 Views

அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் சொத்துக்களை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் கொடுப்பது இயலாத செயல், என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கும் மூன்று முகவர் நிறுவனங்களில், ஒன்று மட்டும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்காமல் உள்ளதாகவும், விரைவில் அந்த முகவர் நிறுவனமும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

முன்னதாக ஸ்டாலின் வெளிட்டிருந்த அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டடங்கள், பேருந்துகள், பணிமனைகள் ஆகியவற்றை 2 ஆயிரத்து 453 கோடி ரூபாய்க்கு அடகு வைத்துள்ள தகவல், அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருந்தார். 

பொதுமக்களின் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் மோசமான நிர்வாகக் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையளிப்பதாகவும், அரசு போக்குவரத்துக் கழகத்தின்  490 பேருந்துகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அயனாவரம், மந்தைவெளி பணிமனைகள், பேசின்பாலம், தி.நகர், திருவான்மியூர், அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.12 (லி)