இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​பள்ளி மாணவரை கடத்தி தீ வைத்து கொல்ல முயற்சி!

November 14, 2017 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2081 Views

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மர்ம நபர்கள், பள்ளி மாணவரை கடத்தி, தீ வைத்து எரித்து கொல்லமுயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாதனவலசை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கோவிந்தன். 

இவர் வெங்களா புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை சைக்கிளில் பள்ளிக்கு சென்ற கோவிந்தனை, நேதாஜி நகர் அருகே இரண்டு பேர் வழிமறித்து, அருகேயுள்ள மாந்தோப்பிற்கு கடத்திச் சென்றனர். பின்னர், கோவிந்தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். 

இதில், வலிதாங்காமல் அலறிய அவர், மர்ம நபர்களிடம் இருந்து தப்பி, அருகேயுள்ள கிராமத்துக்கு ஓடியுள்ளார். இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கோவிந்தனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )