​சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு! | December 12 is the Judgement for Shankar case | News7 Tamil Murder case: Shankar Murder Case Judgement on December 12 | Online News

இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Jallikattu Game

​சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு!

November 14, 2017 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5755 Views

உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சங்கரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலை தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட சங்கரின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கவுசல்யாவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 12-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

சில சுவாரஸ்யமான செய்திகள்

    தற்போதைய செய்திகள் Aug 15
    மேலும் படிக்க...
    Image
    Image

    பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

    • பெட்ரோல்
      ₹79.96/Ltr (₹ 0.13 )
    • டீசல்
      ₹72.29 /Ltr (₹ 0.13 )