இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

​சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு!

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5732 Views

உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சங்கரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலை தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட சங்கரின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கவுசல்யாவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 12-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் வந்தால் தான் நாடு வளர்ச்சியடையும்

திமுக குறித்தோ, ஸ்டாலின் குறித்தோ சமூகவலைதளங்களில்

மதுரை காளவாசல் சந்திப்பில் 54 கோடி ரூபாய் மதிப்பில் பறக்கும்

கர்நாடக அணைகளில் விநாடிக்கு ஒருலட்சம் கன அடி உபரி நீர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.93 /Ltr (₹ 0.06 )
  • டீசல்
    ₹ 72.48 /Ltr (₹ 0.05 )