இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Jallikattu Game

பிரபல ரவுடியை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்!

January 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2117 Views

ஓசூரில் பிரபல ரவுடியை கத்தியால் குத்தி காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு என்கிற பிரேம் நவாஸ். பிரபல ரவுடியான இவர் ஓசூரில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு தேன்கனிக்கோட்டை ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், கடந்த 2012-ம் ஆண்டு ஓசூர் இரும்பு வியாபாரி முஸ்தாக் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சேட்டு முக்கிய குற்றவாளி ஆவார். 

இதைத் தவிர ஓசூரில் டவுன், அட்கோ போலீஸ் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் நேற்று சேட்டு அவரது வீட்டில் இருந்த போது அங்கு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி, காரில் கடத்தி சென்றனர். 2 கார்களில் ஒரு கார் பழுதடையவே அதனை நடுரோட்டில் விட்டுச் சென்றனர். 

உடனடியாக அங்கு சென்ற போலீசார் ரத்த கரையுடன் காணப்பட்ட அந்த காரை கைப்பற்றி ரவுடி சேட்டை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 6

சென்னையில் மசாஜ் சென்டரில் புகுந்து பெண்களை மிரட்டி நகைகளை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தின் போது

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 81.11 /Ltr (₹ 0.16 )
  • டீசல்
    ₹ 72.91 /Ltr (₹ 0.17 )