இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

ஹூக்கா பயன்படுத்தும் நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!

January 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2007 Views

சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஹூக்கா என்னும் குடுவை புகைப்பான்கள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை எச்சரித்துள்ளது. இளைஞர்களை சீரழிக்கும் ஹூக்காவிற்கு ஏற்கனவே தடை உள்ள நிலையில், அரசியல் பின்புலத்தால், அதன் பயன்பாடு வெளிப்படையாக இருந்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரேபிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பரவியது ஹூக்கா எனப்படும் குடுவை புகைப்பான்கள். 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாகவே, முகலாயர்கள் மூலம் இது தமிழகத்திற்கு ஊடுருவியதாக கூறப்படுகிறது. சமீக காலமாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இளைஞர்களை குறிவைத்து ஹூக்கா பார்கள், பல்வேறு கேளிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்களில் செயல்பட்டு வருகிறது.

ஜாடி போன்ற குடுவைகளில் பைப் மூலம் புகைக்கப்படும் ஹூக்கா, இளைஞர்களை கவர்வதற்காக, கேளிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்களால் போட்டி போட்டுக்கொண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிக போதை தரக்கூடிய புகையிலை பொருட்கள், கஞ்சா, மரிஜுவானா, பாங்கு போன்ற பல வகையான போதை வஸ்துக்கள், இதில் பயன்படுத்தப்படுகிறது. 
 
ஹூக்கா பார்கள் வைத்திருப்போர் மீது புகையிலை தடுப்புச் சட்டம், சிறுவர் நீதிச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்றவற்றின்  மூலம் கடும் தண்டனை விதிக்க முடியும். ஆனால், சென்னையில் சில ஹூக்கா பார்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை எனவும், இதுதொடர்பாக காவல்துறை தலைவர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உரிய உத்தரவை வெளியிட வேண்டும் என்கின்றனர் புகையிலை தடுப்பு ஆர்வலர்கள்.
 
தடையை  மீறி, ஹூக்கா என்னும் குடுவை புகைப்பான்களை பயன்படுத்தும் கேளிக்கை விடுதி, நட்சத்திர உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை எச்சரித்துள்ளது. 
 
ஹரியானாவிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் பெரும்பாலான ஹூக்கா பொருட்கள் சென்னைக்கு கொண்டுவரப்படுவதாகவும், இதை தடுக்க காவல்துறை தரப்பில் நடவடிக்கை தேவை எனவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்படுகிறது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு காலத்தின் கட்டாயம் என்று மத்திய

இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு

திருச்சியில் பிச்சைக்காரர்களை உழைப்பாளிகளாக மாற்றியதற்காக

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதால்

தற்போதைய செய்திகள் Jan 21
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)