இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

சமத்துவப் பொங்கல் கொண்டாடிய மாற்றுத்திறனாளிகள்!

January 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1058 Views

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து, சமத்துவப் பொங்கலை கொண்டாடினர். ஆடல், பாடலுடன், கும்மியடித்து, தைத்திருநாளை வரவேற்றனர். 

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் புது வசந்தத்தை வரவேற்கும், நாளான பொங்கல் திருநாளை சென்னையில் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கலாக கொண்டாடி மகிழ்ந்தனர். தங்களின் குறையை நிறையாக மாற்றி, மாற்றுத்திறனாளிகளால் இதுவும் சாத்தியம் என்பதை உணர்த்தும் வகையில் சமூக புறக்கணிப்பை தாண்டி இது போன்ற நன்னாளில் தங்களின் மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். 

இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்து வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி மகிழ்ச்சியுடன் தங்கள் கொண்டாடத்தை வெளிப்படுத்தினர். மேலும் கிராம புறங்களில் கொண்டாடுவது போல் கிராமிய பாடல்களை பாடியும், கும்மியடித்தும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
 
சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதாக உணரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது போன்ற கொண்டாட்டங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும், அவர்களுக்கு புத்துணர்வையும் ஏற்படுத்துகிறது என்றே சொல்லலாம்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )