இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

January 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1311 Views

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக ஆளுநரும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் என்னும் அறுவடை திருநாள் மக்களுக்கு வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக கூறியுள்ளார். இயற்கை அளிக்கும் கொடைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தை மாதத்தின் முதல்நாள் அமைவதாகவும், தமிழக கலாசாரம், நாகரீகம் மற்றும் பெருமையை நிலைநாட்ட இந்த நாளில் உறுதி ஏற்போம் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலக மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களை போற்றிடும் திருநாளாகவும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார். இப்பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டுமென்றும் அவர் வாழ்த்தியுள்ளார்,

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுமாறு வாழ்த்தியுள்ளார். தமிழ் நிலத்தைக் காக்கவும், தமிழினத்தை மீட்கவும் தமிழ் மொழியின் பெருமைகளைப் போற்றவும் இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை முதல் நாள், தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார். எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் இந்த நாளில், மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பணநாயகத்தில் இருந்து விடுவித்து, ஜனநாயகம் காத்து, தமிழக நலன்காக்க மக்கள் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இருளுக்குப் பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு, தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை  செழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் தமிழக மக்களுக்கு  விடுதலை கிடைக்க வேண்டும் என்றும், அதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது, நல்லவையாக இருக்கட்டும் எனவும் விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார். 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழர் திருநாளில் செழித்தோங்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார். லஞ்சம் ஒழிந்து, வறுமை ஒழிந்து வாழ்க்கை செழிக்க வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் பண்டிகை, இந்த உலகம் உழைப்பவர்களுக்கே உரியது என்பதை ஓங்கி உரைப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், தமிழரின் உரிமைகள் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க பாடுபடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டில் மனித உரிமைகள் பறிப்பு, மதவெறி பேச்சுக்கள், சாதிவெறி போன்ற நிலை மாறட்டும் என கூறியுள்ளார். சமதர்ம சமூகம் நோக்கி நடைபோட இந்த பொங்கல் திருநாளில் அனைவரும் சபதமேற்போம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா முழுவதும் சூழ்ந்து வரும் சாதிய-மதவாத அரசின் தீங்குகளிலிருந்து மக்களை பாதுகாத்திட அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதியேற்போம் என கூறியுள்ளார். மண்ணையும் மக்களையும் குறிப்பாக உழவுத்தொழிலையும் காப்பதற்கான சூளுரை ஏற்கும் நாளாக, தமிழர் திருநாளை கொண்டாடுவோம் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )