இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு!

January 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1547 Views

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து மீது, தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில், கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம்  காவல்நிலையங்களில்  வைரமுத்து மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மத நம்பிக்கைக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ், ரைவமுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையத்தில், இந்து முன்னணியினர் அளித்த புகாரின் அடிப்படையில், வைர முத்து மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கவிஞர் வைரமுத்துவை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்து மதத்தை கொச்சை படுத்துவதையே திமுக வழக்கமாக கொண்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ, சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் என்ன பொறியாளரா என கருணாநிதி கேள்வி எழுப்பியதாக கூறினார். தற்போது, அவர் வழி வரும் கனிமொழியும், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் இந்து மதத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதனிடையே, கவிஞர் வைரமுத்துவை மிரட்டலாம் என்று எவரும் கனவுகூட காண வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், காலத்தால் அழியாத காவியங்களை படைத்த வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும், உயிருக்கு உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் எவரும் கனவுகூட காண வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

ஆண்டாள் குறித்த பேச்சுக்கு கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகு, அத்துடன் அந்த விஷயத்தை விட்டுவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து வைரமுத்து மேற்கோள் காட்டியதை தவிர்த்திருக்கலாம் என குறிப்பிட்ட வாசன், ஆண்டாளுக்கு புகழ் பணியில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில், தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )