இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகள்!

September 13, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10502 Views

சென்னை புழல் சிறையில் ஆடம்பர உடைகளில் கைதிகள் உலா வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில், ஏ வகுப்பு கைதிகளுக்கு வசதி செய்து கொடுப்பது வழக்கமானது தான் என சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில்  பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கஞ்சா, சிகரெட், உணவு வகைகள் இங்குள்ள கைதிகளுக்கு தாராளமாக கிடைப்பதாகவும், சிறையில் சிலரின் ஒத்துழைப்போடு செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தன. மேலும், கைதிகள் பலவண்ண உடைகளில் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து, சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறை அதிகாரிகள், வார்டன்கள், கைதிகளிடமும் விசாரணை நடத்தினார். சிறைக்குள் சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டவை எனவும், ஏ பிரிவு கைதிகளுக்கு சில வசதிகள் அளிக்கப்படுவது வழக்கமானது என்றும் தெரிவித்தார். எனினும், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அசுதோஷ் சுக்லா கூறினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )