முகப்பு > தமிழகம்

​சுங்கச்சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோதிகளுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்: நீதிபதிகள் வேதனை!

September 13, 2017

​சுங்கச்சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோதிகளுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்: நீதிபதிகள் வேதனை!


நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோதிகளுமே பணியமர்த்தப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அதில் பெட்டவாய்த்தளை முதல் குளித்தளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவாரிகளில் மணல் அள்ள வரும் லாரிகள், சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் கட்டணம் செலுத்தி பயணிப்போர் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். 

சாலையை பயன்படுத்த பணம் வாங்கிக் கொண்டு லாரிகளை நிறுத்த அனுமதிப்பது தவறு என்றும், எனவே பெட்டவாய்த்தளை முதல் குளித்தளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொதுமேலாளர் நேரில் ஆஜராகினார். 

அவரிடம் சுங்கச்சாவடி மையங்களில் விதிகளை மீறும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். 

பெரும்பாலான சுங்கச்சாவடி மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளுமே பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்