முகப்பு > தமிழகம்

“நீட் விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்யவில்லை” - நடிகை கவுதமி

September 13, 2017

“நீட் விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்யவில்லை” - நடிகை கவுதமி


நீட் விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்யவில்லை என நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை கவுதமி இன்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மனு ஒன்று கொடுத்தார். 

இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக அமைச்சருடன் பேசியுள்ளதாகவும் கூறினார். 

அவர் இது சம்பந்தமாக துறை ரீதியான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து 2 வாரத்திற்குள் உரிய பதில் அளிப்பதாக தெரிவித்துளதாகவும் கூறினார். மாணவி அனிதாவின் மரணம் மிகவும் வேதனை அளிப்பதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்பதால் மாணவர்களின் திறமை குறைவாக உள்ளது என்று அர்த்தம் இல்லை எனவும் கூறினார். 

மேலும் தமிழக அரசு கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து மாணவர்கள் போட்டி தேர்வை எதிர் கொள்ள தயார் படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு மன தைரியத்தை அளிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்