முகப்பு > தமிழகம்

​தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை..!

September 13, 2017

​தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை..!


தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. புதுக்கிராமம் சாலையில் வேப்பமரம் சாய்ந்து விழுந்ததால், சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளை பகுதியில் 34 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது. இந்த மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காலை 10 மணியில் இருந்து சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது, மேலும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

Categories : தமிழகம் : தமிழகம் , #கனமழை

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்