முகப்பு > தமிழகம்

ஓமலூர் அருகே தமிழக அரசு வழங்கிய ஸ்மார்ட் கார்டில் பெரும் குளறுபடி

September 13, 2017

ஓமலூர் அருகே தமிழக அரசு வழங்கிய ஸ்மார்ட் கார்டில் பெரும் குளறுபடி


ஓமலூர் அருகே தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு ஒன்றில் குடும்ப தலைவி ஒருவரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் இடம்பெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குடும்ப அட்டைக்கு பதிலாக தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல குளறுபடிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆர்.சி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி . இவரது மனைவி சரோஜா, ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார். 

நீண்ட நாட்களுக்கு பின்  அங்குள்ள ரேஷன் கடையில் வழங்கிய ஸ்மார்ட் கார்டை பெரியாசாமி பெற்றுள்ளார். அதில் தனது மனைவி சரோஜா புகைப்படத்திற்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு வேறு புகைப்படம் அளித்தால், மாற்றி தருவதாகவும் அதுவரை இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துமாறும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்