முகப்பு > தமிழகம்

தருமபுரி அருகே புளூவேல் விளையாடி விரலை கிழித்துக் கொண்ட பள்ளி மாணவன்

September 13, 2017

தருமபுரி அருகே புளூவேல் விளையாடி விரலை கிழித்துக் கொண்ட பள்ளி மாணவன்


தருமபுரி அருகே புளூவேல் கேம் விளையாடிய பிளஸ் 1 மாணவர் பிளேடால் விரலை கிழித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டூர் அருகே பிளஸ் 1 படித்து வரும் 16 வயது மாணவரின் நடவடிக்கையில் கடந்த சில வாரங்களாக மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அந்த மாணவர் மாணவர் திடீரென பிளேடால் தன் விரல்களை அறுத்துள்ளார். 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மாணவரின் நோட்டுகளில் நீல திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக  இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்