முகப்பு > தமிழகம்

​அரசியல் அல்லது சமூகசேவை எப்படி வந்தாலும் ரஜினி நல்லது செய்வார்: லதா ரஜினிகாந்த்

September 13, 2017ரஜினிகாந்த் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை கண்டிப்பாக செய்வார் என, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

சென்னை மயிலாப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அரசினால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக, நிறைய கோரிக்கைகளை அரசிடம் வைக்கவுள்ளோம் என்று தெரிவித்த அவர், ரஜினிகாந்த் மீதான எதிர்பார்ப்புகள் தமக்கு அழுத்தங்களை தரவில்லை என்றும், அவரின் ஆதரவு நல்ல காரியங்களுக்கு எப்போதும் உள்ளது என்றும் தெரிவித்தார். 

ரஜினிகாந்த் பொதுச்சேவைகள் செய்து வருவதாகவும், அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை கண்டிப்பாக செய்வார் என்றும் லதா ரஜினிகாந்த், தனது பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரசியல் அல்லது சமூகசேவை எப்படி வந்தாலும் ரஜினி நல்லது செய்வார் என்றும் லதா ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்