முகப்பு > தமிழகம்

100வது விபத்தை கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்!

September 13, 2017

100வது விபத்தை கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்!


இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் 100வது விபத்து நடைபெற்றதையொட்டி அப்பகுதி மக்கள் கேக்வெட்டி கொண்டாடினர்.

இராமநாதபுரத்தையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாம்பன் பாலத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள் வழுவழுப்பான சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைப் போக்குவரத்துத்துறையினரிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், அரசுப் பேருந்து ஒன்று இன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அடிக்கடி தொடரும் இந்த சாலை விபத்துகளுக்கு தீர்வு காணாத அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கும் விதமாக அப்பகுதி பொதுமக்கள் இன்று நடைபெற்ற 100 வது விபத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.

இனிமேலும் தாமதிக்காமல் சாலைப்போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடிக்கடி நிகழும் விபத்திற்கு தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்