முகப்பு > தமிழகம்

நீட் தேர்வு விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி

September 13, 2017

நீட் தேர்வு விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி


நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இருந்தால் அனிதாவின் மரணத்தை தடுத்திருக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா என கேள்வி எழுப்பிய நீதிபதி, 
நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதை தடுக்க பிரபலமானவர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? எனவும் வினவினார். 

மேலும், தமிழக மாணவர்களை  நீட் தேர்விற்கு தயார் படுத்த பயிற்சி கொடுக்க சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்றும், தமிழக மாணவர்களை நீட் தேர்விற்கு தயார்படுத்த பயிற்சி மையங்களை தமிழக அரசு நிறுவியுள்ளதா என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். 

இது தவிர, நீட் தேர்வுக்காக கிராமப்புறங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள் நிறுவப்ட்டுள்ளதா? நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவும், மன இறுக்கத்திலிருந்து அவர்கள் விடுபடவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் வினவிய நீதிபதி, 

இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு வரும் 14ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்