முகப்பு > தமிழகம்

​முன்னாள் அமைச்சர் பழனியப்பனை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம்..!!

September 13, 2017

​முன்னாள் அமைச்சர் பழனியப்பனை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம்..!!


நாமக்கல் ஒப்பந்ததாரர் மர்ம மரண வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

நாமக்கல்லை சேர்ந்த அரசு கட்டட ஒப்பந்ததாரான சுப்ரமணியம், கடந்த மே மாதம் தமக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த, 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் அழைப்பாணை விடுத்தனர். 

ஆனால், ஆஜராகாததால் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதனிடையே டிடிவி தினகரன் ஆதரவாளரான பழனியப்பன் பெங்களூருவில் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து நாமக்கல் சிபிசிஐடி போலீசார் அங்கு சென்றனர். 

அங்கு பழனியப்பன் இல்லை என உறுதியானதையடுத்து அவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்