இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

தமிழக முதல்வரை பதவிநீக்கம் செய்யக்கோரும் வழக்கு முடித்துவைப்பு!

September 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1594 Views

தமிழக முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்து உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அதிமுக உறுப்பினர் ஆணழகன் தாக்கல் செய்த மனுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜ் ஆகியோர், ரகசிய காப்பு உறுதி மொழிக்கு எதிராக சிறையில் சென்று சசிகலாவை பார்த்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், இந்த செயல்களுக்கு முதலமைச்சரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை ஆளுநருக்கு அனுப்பி வைக்க சபாநாயகர், சட்டப்பேரவை செயலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தி இருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு முன், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டன. அதில் சசிகலாவிடம் தமிழக அரசு குறித்தோ, நிர்வாகம் குறித்தோ விவாதிக்கவில்லை என்றும், ஆணழகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு


தங்களுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்களை தக்க


பாலிவுட் திரையுலகின் முன்ன்ணி நடிகையாக அசைக்கமுடியாத

தற்போதைய செய்திகள் Nov 22
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.01 (லி)
  • டீசல்
    ₹ 61.4 (லி)