முகப்பு > தமிழகம்

​கேரள மார்க்சிஸ்ட் மாநாட்டில் பங்கேற்கவில்லை: கமல்ஹாசன் விளக்கம்..!

September 13, 2017

​கேரள மார்க்சிஸ்ட் மாநாட்டில் பங்கேற்கவில்லை:  கமல்ஹாசன் விளக்கம்..!


கேரளாவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க, தமக்கு அழைப்பு வரவில்லை என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  இந்த மாநாட்டில் தாம் பங்கேற்பதாக வெளியான தகவலால், தமக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

அக்டோபர் மாதம் இறுதிவரை, சனிக்கிழமைகளில் தமக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில், வரும்16ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வகுப்புவாத எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது. 

இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனை, அண்மையில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதனையடுத்து, மார்க்சிஸ்ட் மாநாட்டில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

Categories : தமிழகம் : தமிழகம் , #கமல்ஹாசன்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்