முகப்பு > தமிழகம்

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட வேண்டும்” -கைலாஷ் சத்தியார்த்தி

September 13, 2017

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட வேண்டும்” -கைலாஷ் சத்தியார்த்தி


இந்தியாவிலுள்ள மக்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போராட வேண்டுமென, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், கன்னியாகுமரி முதல் டெல்லி வரையிலான தேசிய பேரணியின் இரண்டாம் கட்ட தொடக்க நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த பேரணியை கைலாஷ் சத்யார்த்தி துவங்கி வைத்தார். 

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கைலாஷ் சத்யார்த்தி, குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிரான போர்தான் இந்த பேரணி என தெரிவித்தார். 

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதகவும், அதில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்படுகின்றன எனவும் அவர் வேதனை தெரிவித்தார். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்