முகப்பு > தமிழகம்

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்தின் குண்டர் சட்டம் ரத்து

September 13, 2017

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்தின் குண்டர் சட்டம் ரத்து


சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தஷ்வந்த் என்பவருக்கு எதிரான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்த பாபு என்பவரது 6 வயது மகள் ஹாசினி, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானர். 

இது குறித்து மாங்காடு காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில்  சிறுமி ஹாசினியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்ததாக, அந்த குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற வலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதனையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சேகர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஷ்வந்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்