முகப்பு > தமிழகம்

புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும் பிரபல இணையதள நிர்வாகி கைது

September 13, 2017

புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும்  பிரபல இணையதள நிர்வாகி கைது


சட்ட விரோதமாக திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட திருப்பத்தூர் இளைஞரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

புதுப்படங்கள் மற்றும் உரிய உரிமம் கொடுத்து வாங்காமல் இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது தொடர்பாக, நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கவுரி சங்கர் என்பவரை சென்னையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் tamilgun.com என்ற இணையதளம் மூலம், திரைப்படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு, திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபட்டு வந்த கவுரி சங்கரை கடந்த 6 மாதங்களாக கண்காணித்து வந்ததாகவும், அவரை போலீசிடம் சிக்க வைக்க, திட்டமிட்டு சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்ததாகவும் அப்போது கவுரி சங்கரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்