முகப்பு > தமிழகம்

கதிராமங்கல பேச்சுவார்த்தை: ஏமாற்றத்துடன் திரும்பிய மாவட்ட ஆட்சியர்

September 13, 2017

கதிராமங்கல பேச்சுவார்த்தை: ஏமாற்றத்துடன் திரும்பிய மாவட்ட ஆட்சியர்


திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த பொதுமக்கள் தரப்பில் யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான மக்களின் போராட்டம் 117வது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்தார். 

இந்த அழைப்பை ஏற்காமல், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் எனக்கூறி கதிராமங்கலம் அய்யனார் கோயில் திடலில் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதேவேளையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். இறுதிவரை பொதுமக்கள் தரப்பில் யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்