முகப்பு > தமிழகம்

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி!

September 13, 2017

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி!


எம்ஜிஆரின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட முடிவு செய்திருப்பதற்கு, மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆரின் உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு நேற்று அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்